• 8 காணொளிச் சொற்பொழிவுகள்

    இந்த நான்கரை மணிநேரப் பயிற்சி, வெற்றிக்கு இன்றியமையாத, நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய முக்கியமான கொள்கைகளை உகந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. நாகலட்சுமி தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களைப் பொருத்தமான இடங்களில் இதில் பகிர்ந்து கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு.
  • பயிற்சிக் கையேடு

    ஒவ்வொரு சொற்பொழிவிற்கும் ஒரு பயிற்சிக் கையேடு கொடுக்கப்பட்டுள்ளது. அச்சொற்பொழிவுகளில் விளக்கப்படுகின்ற முக்கியக் கருத்துகள் அந்தக் கையேடுகளில் இடம் பெற்றுள்ளன. மேலும், அந்த அனைத்துக் கையேடுகளையும் இணைத்து ஒரு முழுக் கையேடும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • எழுத்துபூர்வமான பயிற்சி

    ஒவ்வொரு சொற்பொழிவிலும் விளக்கப்படுகின்ற கொள்கைகளை நீங்கள் சிறப்பாகப் புரிந்து கொள்ள உதவக்கூடிய எழுத்துபூர்வமான பயிற்சிகள் அந்தந்தப் பயிற்சிக் கையேடுகளில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சொற்பொழிவையும் கேட்டப் பிறகு இந்தப் பயிற்சிப் படிவங்களை நிரப்பவும்.

பயிற்றுவிப்பாளர்

நாகலட்சுமி சண்முகம்

இவர் ஒரு சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். இவர் அமெரிக்காவின் தலைசிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர்களில் ஒருவரான ஜாக் கேன்ஃபீல்டிடம் நேரடிப் பயிற்சி பெற்று, ஜாக்கின் ‘வெற்றிக் கொள்கைகள்’ பயிலரங்கைப் பிறருக்கு நடத்துவதற்கான உரிமத்தையும் பெற்று, கடந்த பத்து ஆண்டுகளாக அப்பயிலரங்கைப் பலதரப்பட்ட மக்களுக்கு நடத்தி வந்துள்ளார்.

இவர் பல விருதுகளைப் பெற்றுள்ள புகழ்மிக்க ஒரு மொழிபெயர்ப்பாளரும்கூட. இவர் 85 நூல்களுக்கு மேல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

வெற்றிக் கொள்கைகள்

நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து நீங்கள் சென்றடைய விரும்புகின்ற இடத்தை அடைவதற்கான ஆற்றல்மிக்கக் கொள்கைகள்

வாழ்வில் எல்லோருமே வெற்றிக் கனியைச் சுவைக்க விரும்புகின்றனர். ஆனால் எவ்வாறு அதைக் கைவசப்படுத்துவது என்பது பலருக்கு ஒரு புரியாத புதிராக இருப்பதுபோலத் தெரிகிறது. வெற்றிக்கான கையேடு எதையும் வாழ்க்கை நமக்கு வழங்குவதில்லை. கடந்த சில நூற்றாண்டுகளின் ஊடாக, அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு வழியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளனர். அவர்களுடைய வெற்றிக் கதைகள் பல ஆண்டுகளாகப் பலரால் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவருடைய கதைகளிலும் இடம் பெற்றுள்ள பொதுவான விஷயங்கள் கண்டறியப்பட்டு எழுத்துபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த துறை வெவ்வேறாக இருந்தபோதிலும், சில குறிப்பிட்டக் கொள்கைகள் அவர்களுடைய வெற்றிக்கு உத்தரவாதமாக அமைந்திருந்தன என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.

உலகம் நெடுகிலும் ஏராளமானோர் தங்கள் வாழ்வில் அசாதாரணமான வெற்றியைக் கைவசப்படுத்த உதவியுள்ள அக்கொள்கைகளைப் பற்றி அமெரிக்காவின் தலைசிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர்களில் ஒருவரான ஜாக் கேன்ஃபீல்டு மேலும் ஆய்வு செய்து, தன்னுடைய சொந்த அனுபவங்கள் வாயிலாகத் தான் கற்றறிந்தவற்றையும் கருத்தில் கொண்டு, அக்கொள்கைகளைச் சீராக ஒழுங்கமைத்து ‘வெற்றிக் கொள்கைகள்’ என்ற இப்பயிலரங்கை உருவாக்கியுள்ளார். இதில் கொடுக்கப்பட்டுள்ள கொள்கைகளை எவரொருவரும் எளிதாகத் தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து, தாங்கள் விரும்புகின்ற எதுவொன்றிலும் வெற்றியடைவதற்கு ஏற்ற விதத்தில், நடைமுறைக்கு உகந்த ஒன்றாக இப்பயிலரங்கு அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

வெற்றிக் கொள்கைகள் பயிலரங்கை மற்றவர்களுக்கு நடத்துவதற்கு ஜாக்கிடமிருந்து நேரடியாகப் பயிற்சி பெற்று, அதற்கான உரிமத்தையும் பெற்றுள்ள நாகலட்சுமி, கடந்த பத்து ஆண்டுகளாக இப்பயிலரங்கை நடத்தி வந்துள்ளார். நீங்கள் உங்களுடைய வேலை அல்லது தொழிலில் மட்டுமல்லாமல், உறவுகள், ஆரோக்கியம், பொருளாதாரம், தனிப்பட்ட வளர்ச்சி போன்ற, உங்களுடைய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் மகத்தான வெற்றியை எட்டுவதற்கு இப்பயிலரங்கு உங்களுக்கு உதவும். இதில் கலந்து கொள்வதன் மூலம், உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்புகின்ற எதையும் உருவாக்குவதற்கான அளப்பரிய ஆற்றல் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். 

நீங்கள் விரும்புகின்றவற்றை அடைவதற்கான வழிமுறைகள், உத்திகள், மற்றும் பயிற்சிகளை உள்ளடக்கிய இப்பயிலரங்கில் பின்வரும் விஷயங்களையும்  நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்:

  • உங்கள்மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி
  • இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவது எப்படி
  • நிராகரிப்பையும் தோல்வியையும் கையாள்வது எப்படி
  • நீங்கள் விரும்புவதைக் கேட்டுப் பெறும் கலையில் எவ்வாறு கைதேர்ந்தவராக ஆவது எப்படி
  • சந்தேகங்கள், மட்டுப்படுத்தும் சிந்தனைகள், மற்றும் பயங்களிலிருந்து மீள்வது எப்படி
  • பின்னூட்டக்கருத்துகளைக் கேட்டுப் பெறுவதும் வாழ்வில் தொடர்ந்து மேம்படுவதும் எப்படி
  • குறை கூறுவதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி
  • ஓர் எதிர்மறையான சூழலில் நேர்மறையாக இருப்பது எப்படி
  • நீங்கள் ஏன் உங்கள் வாழ்க்கைக்கு 100% பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்


இப்பயிலரங்கில் நாகலட்சுமி தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் வாயிலாகவும் வெற்றிக் கொள்கைகளை விளக்குவது இக்கொள்கைகளைச் சிறப்பாகப் புரிந்து கொள்ள உதவும்.

வெற்றி இனியும் உங்களுக்கு ஓர் எட்டாக் கனியாக இருக்க வேண்டியதில்லை. எண்ணற்றோருக்குப் பலனளித்துள்ள இந்த வெற்றிக் கொள்கைகளை நீங்கள் உங்கள் வாழ்வில் செயல்படுத்தும்போது, நீங்களும் ஒரு வெற்றியாளராக ஆவீர்கள் என்பது உறுதி.

Watch Intro Video

அறிமுகக் காணொளி

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

  • இப்பயிலரங்கு யாருக்குப் பொருத்தமாக இருக்கும்?

    பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், இல்லத்தரசிகள், பெரியவர்கள், தன்னார்வலர்கள், சுயதொழில் புரிவோர் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பலனளிக்கக்கூடிய ஒரு பயிலரங்கு இது. வேலை அல்லது தொழில், பொருளாதாரம், உடல் நலம், உறவுகள், தனிப்பட்ட வளர்ச்சி, சமுதாயப் பங்களிப்பு போன்ற எந்தவொரு தளத்திலும் நீங்கள் விரும்புகின்ற எந்தவொரு விஷயத்தையும் வெற்றிகரமாக அடைவதற்கு இப்பயிலரங்கு உங்களுக்கு உதவும்.

  • இப்பயிலரங்கு எந்த விதத்தில் உங்களுக்கு உதவும்?

    வாழ்க்கை உங்களை நோக்கி வீசும் சவால்களை எதிர்கொண்டு, கவலைகள், பயங்கள், முட்டுக்கட்டைகள் ஆகியவற்றிலிருந்து மீண்டு, நிராகரிப்பையும் தோல்வியையும் திறமையாகக் கையாண்டு, உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை நனவாக்குவதற்கு உதவக்கூடிய கொள்கைகளை இதில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். உங்களை மட்டுப்படுத்துகின்ற சிந்தனைகளிலிருந்து மீள்வதற்கான வழியையும் இதில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். மொத்தத்தில், வாழ்வில் உங்களை முன்னேறவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்ற எதிர்மறையான ஆற்றல்களிலிருந்து விடுபட்டு ஒரு வெற்றியாளராக ஆவது எப்படி என்பதை இப்பயிலரங்கு உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

  • இப்பயிலரங்கை எத்தனைக் காலம் நான் பயன்படுத்திக் கொள்ளலாம்?

    நீங்கள் ஒரு முறை கட்டணம் செலுத்தி இதில் பதிவு செய்து கொண்டால், இதிலுள்ள ஒன்பது காணொளிகளையும் நீங்கள் வாங்கிய தினத்திலிருந்து 6 மாதங்கள்வரை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கற்றுப் பயன் பெறலாம்.

  • ஏதேனும் கையேடு கொடுக்கப்படுமா?

    ஆம். இப்பயிலரங்கில் கற்றுக் கொடுக்கப்படுகின்ற பெற்றுள்ள ஒவ்வொரு கொள்கையைப் பற்றிய விளக்கங்களும் பொருத்தமான பயிற்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக உங்களுக்கு உதவக்கூடிய சில நூல்களின் பெயர்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. PDFன் வடிவில் உள்ள இக்கையேட்டை நீங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • இது எத்தனை மணிநேரப் பயிலரங்கு?

    4 மணிநேரம் 30 நிமிடங்கள் கொண்ட இப்பயிலரங்கு எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஒரு நிறைவுப் பகுதியும் உள்ளது.

  • எவ்வாறு கட்டணம் செலுத்துவது?

    Credit Card/Debit Card மூலமாகப் பணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்கள் கீழ்க்கண்ட அலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்பு கொண்டால், என்னுடைய வங்கி விபரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் பணம் செலுத்தினால், 24 மணி நேரத்திற்குள் இணையவழிப் பயிலரங்கிற்கான கூப்பன் எண் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அலைபேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்திப் பயிலரங்குத் தளத்திற்குள் நுழையலாம்.

    மின்னஞ்சல்: [email protected]
    அலைபேசி: 9324206345

  • இப்பயிலரங்கை நான் வேறு யாருக்கேனும் பரிசாகக் கொடுக்கலாமா?

    நிச்சயமாக! பின்வரும் மின்னஞ்சல் முகவரில் நீங்கள் தொடர்பு கொண்டால், ஆவன செய்யப்படும்:

    [email protected]

  • இப்பயிலரங்கைப் பார்த்தப் பிறகு எனக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நான் என்ன செய்ய வேண்டும்?

    உங்களுடைய சந்தேகங்கள் எவையாக இருந்தாலும், பின்வரும் மின்னஞ்சல் வாயிலாக நீங்கள் அவற்றைத் தெரிவித்தால், அவற்றுக்குத் தகுந்த விளக்கமளிக்கப்படும்:

    [email protected]

பகுதி 1

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டியதை அடைய முடியாமல் போவதற்கான காரணம் தங்களுக்கு உண்மையிலேயே என்ன வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்காததுதான்.

வாழ்வில் நீங்கள் எவற்றை சாதிக்க விரும்புகிறீர்கள், எவற்றைக் கைவசப்படுத்த விரும்புகிறீர்கள், யாராக ஆக விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகளின் வாயிலாக இப்பகுதியில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

பகுதி 2

இவ்வுலகில் சாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு விஷயமும் யாரோ ஒருவர் தன்மீது நம்பிக்கை கொண்டு, தன்னுடைய சௌகரிய வட்டத்தைவிட்டு வெளியே வந்து, தன் கனவு சாத்தியம் என்று நம்புவதன் விளைவதுதான் என்பதை இப்பகுதி உங்களுக்கு உணர்த்துகிறது.

மற்றவர்களுக்கு உங்கள்மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் நீங்கள் ஒரு வெற்றியாளராக உருவாக விரும்பினால், நீங்கள் உங்கள்மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது என்பதையும், அதற்கு உதவக்கூடிய சில வழிகளையும் இதில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

பகுதி 3

இலக்குகளை நிர்ணயிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவற்றை நிர்ணயிப்பதற்கான சரியான வழியையும் இப்பகுதி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இலக்குகளுக்கும் வெறும் ஆசைக்கும் இடையேயான வேறுபாட்டை இதில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

பிறகு, அளவுக்கதிகமாகத் திட்டமிடுவதையும் கச்சிதமான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் விடுத்து துணிந்து வேகமாகச் செயலில் இறங்கி வாழ்வில் முன்னோக்கிச் செல்வது எப்படி என்பதையும் இதில் நீங்கள் கற்றறிவீர்கள்.

பகுதி 4

உங்களை முடக்கிப் போட்டு உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்ற ஒரு விஷயம் பயம். ஆனால் உங்களுடைய பயங்கள் யாவும் கற்பனையே என்பதையும், பெரும்பாலான மக்களை ஆட்டிப் படைக்கின்ற தோல்வி குறித்த பயத்திலிருந்தும் நிராகரிப்புக் குறித்த பயத்திலிருந்தும் விடுபடுவது எப்படி என்பதையும் இப்பகுதியில் நீங்கள் பார்க்கவிருக்கிறீர்கள்.

உங்களுடைய பயங்கள் எவை என்பதையும், எவ்வாறு உங்களை நீங்களே பயமுறுத்திக் கொள்கிறீர்கள் என்பதையும் கண்டறிந்து, அவற்றிலிருந்து மீள்வதற்கான ஒரு வழியை இதில் நீங்கள் காண்பீர்கள்.

பகுதி 5

உங்களுக்கு வேண்டியதை மற்றவர்களிடத்தில் கேட்பதில் உங்களுக்குப் பிரச்சனை இருந்தால் அது எவ்வாறு உங்கள் வெற்றிக்கான பாதையில் ஒரு பெரும் முட்டுக்கட்டையாக அமைகிறது என்பதை இப்பகுதியின் வாயிலாக நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

மேலும், நிராகரிப்புக் குறித்த பயம்தான் உங்களுக்கு வேண்டியதைக் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்கின்ற ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது என்பதை விளக்குகின்ற இப்பகுதி, நிராகரிப்பைக் கையாள்வதற்கான ஆற்றல்மிக்க வழியையும் பரிந்துரைக்கிறது.

பகுதி 6

பின்னூட்டக்கருத்துகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவற்றைக் கையாள்வதற்கான சரியான வழியையும் இப்பகுதியில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

மேலும், வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் தொடர்ந்து உங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இதில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

பகுதி 7

நீங்கள் உங்களுடைய நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும், உங்களுடைய இலக்குகளை அடையவும் விரும்பினால், முக்கியத்துவமற்ற மற்றும் ஆக்கப்பூர்வமற்ற விஷயங்களை நீங்கள் ஏன் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதையும், மற்றவர்களின் மனம் நோகாமல் அவர்களிடம் ‘முடியாது’ என்று எப்படிக் கூறுவது என்பதையும் இதில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

மேலும், உங்கள் வாழ்வில் எதிர்மறையான மக்களைத் தவிர்ப்பதும் நேர்மறையான மக்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும்படி பார்த்துக் கொள்வதும் ஏன் முக்கியம் என்பதையும், அவர்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என்பதையும் இப்பகுதி விளக்குகிறது.

பகுதி 8

உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் 100% பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை இப்பகுதி விளக்குகிறது. உங்கள் வாழ்க்கைக்கு முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்வதுதான் உங்கள் வெற்றிக்கான அடித்தளம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

குறை கூறுவது, மற்றவர்கள்மீது பழி போடுவது, சாக்குப்போக்குகளைக் கூறுவது போன்றவை எவ்வாறு உங்களை முன்னேறவிடாமல் தடுக்கின்றன என்பதையும், அவற்றிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதையும் இப்பகுதி விரிவாக எடுத்துரைக்கிறது.

நிறைவுப் பகுதி

முந்தைய எட்டுப் பகுதிகளின் சாராம்சத்தை எடுத்துரைக்கின்ற இப்பகுதி, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாவடக்கத்தைக் கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

BUY

பயிற்சிப் பாடங்கள்

  • 1

    பகுதி 1

    • வருக! + பகுதி 1 - சாராம்சம்

    • பகுதி 1 - பிரிவு 1

    • பகுதி 1 - பிரிவு 2

    • பகுதி 1 - கையேடு

    • ஒட்டுமொத்தப் பயிற்சிக் கையேடு

  • 2

    பகுதி 2

    • பகுதி 2 - சாராம்சம்

    • பகுதி 2 - பிரிவு 1

    • பகுதி 2 - பிரிவு 2

    • பகுதி 2 - கையேடு

  • 3

    பகுதி 3

    • பகுதி 3 - சாராம்சம்

    • பகுதி 3 - பிரிவு 1

    • பகுதி 3 - பிரிவு 2

    • பகுதி 3 - கையேடு

  • 4

    பகுதி 4

    • பகுதி 4 - சாராம்சம்

    • பகுதி 4

    • பகுதி 4 - கையேடு

  • 5

    பகுதி 5

    • பகுதி 5 - சாராம்சம்

    • பகுதி 5 - பிரிவு 1

    • பகுதி 5 - பிரிவு 2

    • பகுதி 5 - கையேடு

  • 6

    பகுதி 6

    • பகுதி 6 - சாராம்சம்

    • பகுதி 6

    • பகுதி 6 - கையேடு

  • 7

    பகுதி 7

    • பகுதி 7 - சாராம்சம்

    • பகுதி 7

    • பகுதி 7 - கையேடு

  • 8

    பகுதி 8

    • பகுதி 8 - சாராம்சம்

    • பகுதி 8 - பிரிவு 1

    • பகுதி 8 - பிரிவு 2

    • பகுதி 8 - கையேடு

  • 9

    நிறைவாக!

    • நிறைவாக!

    • வாழ்த்துகள்