வாழ்வில் எல்லோருமே வெற்றிக் கனியைச் சுவைக்க விரும்புகின்றனர். ஆனால் எவ்வாறு அதைக் கைவசப்படுத்துவது என்பது பலருக்கு ஒரு புரியாத புதிராக இருப்பதுபோலத் தெரிகிறது. வெற்றிக்கான கையேடு எதையும் வாழ்க்கை நமக்கு வழங்குவதில்லை. கடந்த சில நூற்றாண்டுகளின் ஊடாக, அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு வழியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளனர். அவர்களுடைய வெற்றிக் கதைகள் பல ஆண்டுகளாகப் பலரால் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவருடைய கதைகளிலும் இடம் பெற்றுள்ள பொதுவான விஷயங்கள் கண்டறியப்பட்டு எழுத்துபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த துறை வெவ்வேறாக இருந்தபோதிலும், சில குறிப்பிட்டக் கொள்கைகள் அவர்களுடைய வெற்றிக்கு உத்தரவாதமாக அமைந்திருந்தன என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.
உலகம் நெடுகிலும் ஏராளமானோர் தங்கள் வாழ்வில் அசாதாரணமான வெற்றியைக் கைவசப்படுத்த உதவியுள்ள அக்கொள்கைகளைப் பற்றி அமெரிக்காவின் தலைசிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர்களில் ஒருவரான ஜாக் கேன்ஃபீல்டு மேலும் ஆய்வு செய்து, தன்னுடைய சொந்த அனுபவங்கள் வாயிலாகத் தான் கற்றறிந்தவற்றையும் கருத்தில் கொண்டு, அக்கொள்கைகளைச் சீராக ஒழுங்கமைத்து ‘வெற்றிக் கொள்கைகள்’ என்ற இப்பயிலரங்கை உருவாக்கியுள்ளார். இதில் கொடுக்கப்பட்டுள்ள கொள்கைகளை எவரொருவரும் எளிதாகத் தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து, தாங்கள் விரும்புகின்ற எதுவொன்றிலும் வெற்றியடைவதற்கு ஏற்ற விதத்தில், நடைமுறைக்கு உகந்த ஒன்றாக இப்பயிலரங்கு அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
வெற்றிக் கொள்கைகள் பயிலரங்கை மற்றவர்களுக்கு நடத்துவதற்கு ஜாக்கிடமிருந்து நேரடியாகப் பயிற்சி பெற்று, அதற்கான உரிமத்தையும் பெற்றுள்ள நாகலட்சுமி, கடந்த பத்து ஆண்டுகளாக இப்பயிலரங்கை நடத்தி வந்துள்ளார். நீங்கள் உங்களுடைய வேலை அல்லது தொழிலில் மட்டுமல்லாமல், உறவுகள், ஆரோக்கியம், பொருளாதாரம், தனிப்பட்ட வளர்ச்சி போன்ற, உங்களுடைய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் மகத்தான வெற்றியை எட்டுவதற்கு இப்பயிலரங்கு உங்களுக்கு உதவும். இதில் கலந்து கொள்வதன் மூலம், உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்புகின்ற எதையும் உருவாக்குவதற்கான அளப்பரிய ஆற்றல் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் விரும்புகின்றவற்றை அடைவதற்கான வழிமுறைகள், உத்திகள், மற்றும் பயிற்சிகளை உள்ளடக்கிய இப்பயிலரங்கில் பின்வரும் விஷயங்களையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்:
- உங்கள்மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி
- இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவது எப்படி
- நிராகரிப்பையும் தோல்வியையும் கையாள்வது எப்படி
- நீங்கள் விரும்புவதைக் கேட்டுப் பெறும் கலையில் எவ்வாறு கைதேர்ந்தவராக ஆவது எப்படி
- சந்தேகங்கள், மட்டுப்படுத்தும் சிந்தனைகள், மற்றும் பயங்களிலிருந்து மீள்வது எப்படி
- பின்னூட்டக்கருத்துகளைக் கேட்டுப் பெறுவதும் வாழ்வில் தொடர்ந்து மேம்படுவதும் எப்படி
- குறை கூறுவதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி
- ஓர் எதிர்மறையான சூழலில் நேர்மறையாக இருப்பது எப்படி
- நீங்கள் ஏன் உங்கள் வாழ்க்கைக்கு 100% பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்
இப்பயிலரங்கில் நாகலட்சுமி தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் வாயிலாகவும் வெற்றிக் கொள்கைகளை விளக்குவது இக்கொள்கைகளைச் சிறப்பாகப் புரிந்து கொள்ள உதவும்.
வெற்றி இனியும் உங்களுக்கு ஓர் எட்டாக் கனியாக இருக்க வேண்டியதில்லை. எண்ணற்றோருக்குப் பலனளித்துள்ள இந்த வெற்றிக் கொள்கைகளை நீங்கள் உங்கள் வாழ்வில் செயல்படுத்தும்போது, நீங்களும் ஒரு வெற்றியாளராக ஆவீர்கள் என்பது உறுதி.